பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வுஷு, மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி நவோரெமுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 SEP 2023 11:03AM by PIB Chennai

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு, மகளிர் சண்டா 60 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி நவோரெமுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“வுஷு, பெண்கள் சண்டா 60 கிலோ எடைப்பிரிவில், அர்ப்பணிப்பு மற்றும் திறமைமிக்க நமது ரோஷிபினா தேவி நவோரெம் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அசாதாரணமான திறமையையும், சிறந்த செயல்பாட்டிற்கான இடைவிடாத முயற்சியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஒழுக்கமும், உறுதியும் பாராட்டுக்குரியது. அவருக்கு வாழ்த்துகள்.”

***

ANU/AD/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1961627) வருகையாளர் எண்ணிக்கை : 153