பிரதமர் அலுவலகம்
பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதல்வரின் சகோதரியுமான திருமதி கீதா மேத்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
17 SEP 2023 9:24AM by PIB Chennai
பிரபல எழுத்தாளரும், ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான திருமதி கீதா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகப் பதிவில், பிரதமர் தெரிவித்ததாவது:
“புகழ்பெற்ற எழுத்தாளர் திருமதி கீதா மேத்தாவின் மறைவு, எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது அறிவுத்திறனுடன், எழுத்து மற்றும் திரைப்படத் தயாரிப்பில் ஆர்வம் ஆகியவற்றால் அவர் ஒரு பன்முக ஆளுமையாக அறியப்பட்டார். இயற்கை மற்றும் நீர் சேமிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இந்த துயரமான நேரத்தில் திரு நவீன் பட்நாயக் @Naveen_Odisha மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதல்கள். ஓம் சாந்தி.”
(Release ID: 1958094)
***
AP/BR/KRS
(Release ID: 1958116)
Visitor Counter : 167
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam