பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
13 SEP 2023 3:23PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, சைப்ரஸில் உள்ள மெஸர்ஸ் பெர்ஹ்யாண்டா நிறுவனத்தின் சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ரூ.9589 கோடி வரை அன்னிய முதலீட்டுக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. தேசிய பங்குச் சந்தை நிறுவனம் மற்றும் மும்பை பங்குச் சந்தை நிறுவனம் ஆகியவற்றில் பட்டியலிடப்பட்ட பொது வரையறுக்கப்பட்ட இந்திய மருந்து நிறுவனமான மெஸர்ஸ் சுவென் மருந்து லிமிடெட்டின் 76.1% பங்குகளை சைப்ரஸில் உள்ள மெஸர்ஸ் பெர்ஹியாண்டா நிறுவனம், தற்போதுள்ள பங்குதாரர்கள் மற்றும் பொது பங்குதாரர்களிடமிருந்து கட்டாய திறந்தவெளி வாய்ப்பு மூலம் பரிமாற்றம் செய்வதன் மூலம் கையகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுவென் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மொத்த அன்னிய முதலீடு 90.1% வரை அதிகரிக்கலாம்.
இந்த திட்டத்தை செபி, ரிசர்வ் வங்கி, சிசிஐ மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன. இந்த முன்மொழிவை சம்பந்தப்பட்ட துறைகள், ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவை பரிசீலித்த பின்னர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இது தொடர்பாக பொருந்தக்கூடிய அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் பூர்த்தி செய்வதற்கு உட்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1956906
***
ANU/AP/IR/AG/GK
(Release ID: 1957017)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam