மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

புது தில்லி தலைவர்களின் பிரகடனம் சமமான மற்றும் நீடித்த கல்விக்கான உலகின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது - திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 11 SEP 2023 6:47PM by PIB Chennai

இந்தியாவின் காலத்தால் அழியாத 'உலகம் ஒரே குடும்பம்'  என்ற உத்வேகத்திற்கு இணங்கவும், இந்த ஒரே பூமியில் ஒன்றாக வாழும் இந்த ஒரே குடும்பத்திற்கு ஒரே  எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக மனிதநேயத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கொண்டு வந்ததற்காகவும்  பிரதமர் திரு. நரேந்திர மோடியின்  தொலைநோக்குப் பார்வைக்கு தனது  மனமார்ந்த நன்றியையும் மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க யூனியனை இந்த மதிப்புமிக்க குழுவில் வெற்றிகரமாக சேர்ப்பதிலும், ஜி20 ஐ உண்மையிலேயே ஜனநாயகப்படுத்துவதிலும், உலகளாவிய வளரும் நாடுகளின் குரலுக்கு வலு சேர்ப்பதிலும் இந்தியாவின் தலைமையின் மூலம் இந்த உள்ளடக்கிய பார்வை உணரப்பட்டுள்ளது . ஒருமித்த கருத்து, ஒத்துழைப்பு அடிப்படையில் உலகளாவிய ஒழுங்கை மாற்றியதற்காக இந்தியாவின் தலைமைத்துவ பதவி சரியாக பாராட்டப்படுகிறது என்று திரு பிரதான்   ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

ஜி20 இன் கீழ் கல்வி முன்னுரிமைகள் குறித்து பேசிய திரு பிரதான், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான திறன்களை உருவாக்குதல் மற்றும் வேலையின் எதிர்காலம் மற்றும் ஒத்துழைப்பு மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான துறைகளில் விவாதங்களுக்கு முன்னுரிமை அளித்தது புது தில்லி தலைவர்களின் பிரகடனம் என்று கூறினார்.  கல்வியின் மூலம் சமத்துவமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக பணியாற்றுவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளது மற்றும் அதற்கான செயல்திட்டத்தை வழங்கியுள்ளது.  ஜி20 கட்டமைப்பின் கீழ் உலகளாவிய கல்வி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல நமது பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கிய தொலைநோக்கு தலைமையையும் தெளிவான விளக்கத்தையும் திரு பிரதான் பாராட்டினார். இதன் விளைவாக இந்தியாவின் கல்வி மற்றும் திறன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது மற்றும் நமது தேசிய கல்விக் கொள்கை 2020 இன் முக்கிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார்.

 

டிஜிட்டல் மாற்றம், பசுமை மாற்றம் மற்றும் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி ஆகிய அடையாளம் காணப்பட்ட மூன்று பிரிவுகளில் கல்விப் பணிக்குழு முன்னுரிமைகளுடன் தலைவர்களின் பிரகடனம் பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

-----

(Release ID: 1956424)

ANU/AD/IR/KPG/KRS



(Release ID: 1956444) Visitor Counter : 126