பிரதமர் அலுவலகம்
பிரேசில் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
10 SEP 2023 8:06PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (10-09-2023) புதுதில்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டின் போது பிரேசில் அதிபர் திரு லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்தார்.
இந்தியாவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் வெற்றிக்காக பிரேசில் அதிபர் திரு லூலா பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிரேசில் ஜி 20 தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரேசிலின் தலைமைத்துவத்திற்கு இந்தியாவின் முழு ஆதரவும் உண்டு என உறுதியளித்தார்.
உயிரி எரிபொருள், மருந்து, வேளாண் சார்ந்த தொழில்கள், விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உட்பட இந்தியா - பிரேசில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பிற்குப் பின் ஒரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டது.
***
ANU/SM/PLM/DL
(Release ID: 1956175)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam