பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி


காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள் இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான நமது கூட்டுக் கண்ணோட்டத்தை வழிநடத்துகின்றன: பிரதமர்

Posted On: 10 SEP 2023 12:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ஜி 20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இன்று புகழ்பெற்ற ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில்  மரியாதை செலுத்தினர். காலத்தால் அழியாத காந்திஜியின் லட்சியங்கள், இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான கூட்டுக் கண்ணோட்டத்தை வழிநடத்துகின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

எக்ஸ் சமூக ஊடகத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"புகழ்பெற்ற ராஜ்காட்டில், ஜி 20 குடும்பம், அமைதி, சேவை, இரக்கம் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமான மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தியது. 

பல்வேறு நாடுகள் ஒன்றிணையும்போது, காந்திஜியின் காலத்தால் அழியாத லட்சியங்கள், இணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வளமான உலகளாவிய எதிர்காலத்திற்கான நமது கூட்டுக் கண்ணோட்டத்தை வழிநடத்துகின்றன”.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வருமாறு:

"ஜி 20 குடும்பம் பாபுவுக்கு அஞ்சலி செலுத்துகிறது. உலகத் தலைவர்கள் ராஜ்காட்டுக்குச் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தினர்”.

***

ANU/SM/PKV/DL


(Release ID: 1956006) Visitor Counter : 192