பிரதமர் அலுவலகம்

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் என்பது ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும்: பிரதமர்

Posted On: 09 SEP 2023 7:16PM by PIB Chennai

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பகிரப்பட்ட விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பயணத்தை வரையறுக்கும் ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

 

எக்ஸ் பதிவில்  பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"பகிரப்பட்ட விருப்பங்கள் மற்றும் கனவுகளின் பயணத்தை வரையறுக்கும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. வரலாறு விரிவடையும் நிலையில், இந்த வழித்தடம் மனித முயற்சிக்கும் கண்டங்களைக் கடந்த ஒற்றுமைக்கும் ஒரு சான்றாக இருக்கட்டும்."

************

(Release ID: 1955842)

ANU/SM/SMB/KRS



(Release ID: 1955877) Visitor Counter : 132