பிரதமர் அலுவலகம்
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் இந்தியாவின் அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்தை உலக வங்கியின் ஜி20 ஆவணம் பாராட்டுகிறது
Posted On:
08 SEP 2023 12:31PM by PIB Chennai
உலக வங்கியின் ஜி20 ஆவணத்தில் இந்தியா வெறும் 6 ஆண்டுகளில் அனைவரையும் உட்படுத்திய பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளது, இல்லையெனில் குறைந்தது 47 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்ற உலக வங்கியின் கருத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் இயக்கப்படும் அனைவரையும் உட்படுத்திய பொருளாதாரத்தில் இந்தியாவின் பாய்ச்சல் வேகம்!
உலக வங்கி @WorldBank தயாரித்த ஜி20 ஆவணம் இந்தியாவின் வளர்ச்சி குறித்து மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தும் தகவலைப் பகிர்ந்துள்ளது. இந்தியா வெறும் 6 ஆண்டுகளில் அனைவரையும் உட்படுத்திய பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளது, இல்லையெனில் குறைந்தது 47 ஆண்டுகள் ஆகியிருக்கும்.
நமது வலுவான டிஜிட்டல் முறை பணம் செலுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் உணர்வுக்குப் பாராட்டுகள். விரைவான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு சான்றாகும்.
https://www.news18.com/india/if-not-for-digital-payment-infra-in-6-yrs-india-would-have-taken-47-yrs-to-achieve-growth-world-bank-8568140.html"
***
ANU/AD/SMB/AG/KPG
(Release ID: 1955557)
Visitor Counter : 236
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam