பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
நாடு முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023 -ன் முதல் நாளில் சுமார் 10 லட்சம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன
Posted On:
04 SEP 2023 2:54PM by PIB Chennai
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செப்டம்பர் 2023 முழுவதும் 6-வது தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023 -ன் முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊட்டச்சத்து இந்தியாவையொட்டிய இந்த மக்கள் இயக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும்.
தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023-ன் தொடக்க விழாவில், நாடு முழுவதிலுமிருந்து அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உணவு பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒருங்கிணைந்தனர். இதற்காக அவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஆண்டு, தேசிய ஊட்டச்சத்து மாதம் 2023-ன் நோக்கம், வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை முழுமையாக சமாளிப்பதாகும். ஊட்டச்சத்து மாதம் 2023-ன் முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய மனித வாழ்க்கை நிலைகள்: கர்ப்பம், பச்சிளங்குழந்தை பருவம், குழந்தை பருவம் மற்றும் இளமை பருவம். "சுபோஷித் பாரத், சாக்ஷர் பாரத், சஷக்த் பாரத்" (ஊட்டச்சத்து நிறைந்த இந்தியா, படித்த இந்தியா, அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட கருப்பொருளின் மூலம் இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து புரிதலை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
பிரத்யேக தாய்ப்பால் மற்றும் சத்துமிக்க உணவு குறித்த முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட பிரச்சாரங்கள் மூலம் அடிப்படை ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்த நாடு தழுவிய அளவில் இந்த ஒரு மாத நிகழ்வில் கவனம் செலுத்தப்படும்.
***
SM/ANU/IR/RS/KPG
(Release ID: 1954617)
Visitor Counter : 339
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada