பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எரிவாயு விலை குறைப்பு நமது சகோதரிகளின் எளிதான வாழ்க்கை முறையை அதிகரிக்கும்: பிரதமர்

Posted On: 29 AUG 2023 6:19PM by PIB Chennai

அனைத்து எல்பிஜி நுகர்வோருக்கும் அதாவது 33 கோடி இணைப்புகளுக்கு எல்பிஜி சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

 

ரக்சா பந்தன் பண்டிகை நமது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள் என்று திரு. மோடி கூறினார்.

 

பிரதமரின் உஜ்வாலாத் திட்ட நுகர்வோர் சிலிண்டர் ஒன்றுக்கு 200 ரூபாய் மானியத்தை தங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து பெறுவார்கள்.

 

பிரதமரின்  உஜ்வாலாத் திட்டத்தின் கீழ், 75 லட்சம் கூடுதல் இணைப்புகளுக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் பிரதமரின் உஜ்வாலாத் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும்.

 

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் எக்ஸ் சமூக ஊடக பதிவுக்கு, பிரதமர் எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ரக்சா பந்தன் பண்டிகை நமது குடும்பத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள், எரிவாயு விலை குறைப்பால், நமது குடும்ப  சகோதரிகளின் வசதி அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை எளிதாக இருக்கும். என் ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிக்க  நான் விரும்புகிறேன்."

***

AD/ANU/IR/RS/KRS

(Release ID: 1953290)


(Release ID: 1953370) Visitor Counter : 131