பிரதமர் அலுவலகம்
பிரதமருக்கு கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருதை கிரீஸ் அதிபர் வழங்கினார்
प्रविष्टि तिथि:
25 AUG 2023 3:04PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடிக்கு கிரீஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருதை அந்நாட்டு அதிபர் கத்தரீனா சாகெல்லரோபௌலோ வழங்கினார்.
‘ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதீனா தேவதையின் தலை நட்சத்திரத்தின் முன் பக்கத்தில் பொறிக்கப்பட்டு, "நீதிமான்கள் மட்டுமே மதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராண்ட் கிராஸ் ‘ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது, தங்கள் தனித்துவமான பதவியின் காரணமாக, கிரேக்கத்தின் மதிப்பை உயர்த்த பங்களித்துள்ள கிரேக்கத்தின் பிரதமர்கள் மற்றும் புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு வழங்கப்படுகிறது,
பாராட்டுப் பத்திரத்தில், "பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையில், நட்புறவு கொண்ட இந்திய மக்களுக்கு ஒரு கௌரவமாக வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த விஜயத்தின் போது, கிரேக்க அரசு தனது நாட்டின் உலகளாவிய பரவலை அயராது ஊக்குவித்த மற்றும் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக முறையாக உழைத்து, துணிச்சலான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த ஒரு ராஜதந்திரியான இந்திய பிரதமரை கௌரவிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை சர்வதேச நடவடிக்கைகளின் முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டு வந்த ஒரு ராஜதந்திரியாகவும் அவர் திகழ்கிறார்.
பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் கிரேக்க-இந்திய நட்பின் உத்திபூர்வ மேம்பாட்டிற்கான பிரதமர் மோடியின் தீர்க்கமான பங்களிப்பு இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கிரேக்க அதிபர் திருமதி கத்தரீனா சாகெல்லரோபௌலூ, அரசு மற்றும் கிரேக்க மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
***
ANU/SM/PKV/AG/KPG
(रिलीज़ आईडी: 1952213)
आगंतुक पटल : 262
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam