சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் -19-ன் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

Posted On: 21 AUG 2023 8:27PM by PIB Chennai

சார்ஸ்-கோவ்-2 வைரஸின் சில புதிய திரிபுருக்கள் கண்டறியப்பட்டதாக அண்மையில் வெளியான  அறிக்கைகளைக் கருத்தில் கொண்டு, உலகளாவிய மற்றும் தேசிய கொவிட் -19 நிலைமை, புழக்கத்தில் உள்ள புதிய திரிபுருக்கள், அவற்றின் பொது சுகாதாரத் தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டத்திற்குப் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமை தாங்கினார்.

 

இந்தக் கூட்டத்தில் நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோத் பால், அமைச்சரவை  செயலாளர் திரு ராஜீவ் கெளபா, பிரதமர் அலுவலக ஆலோசகர் திரு அமித் கரே, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த்,   டி.எச்.ஆர் செயலாளர் மற்றும் .சி.எம்.ஆர் டி.ஜி  திரு ராஜீவ் பாஹ்ல், உயிரித் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு ராஜேஷ் எஸ்.கோகலே, பிரதமரின் கூடுதல் செயலாளர் திருமதி புண்ணிய சலீலா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சார்ஸ்-கோவ்-2 வைரஸின் சில புதிய திரிபுருக்களான பிஏ.2.86 (பைரோலா) மற்றும் .ஜி.5 (எரிஸ்) உள்ளிட்ட உலகளாவிய கோவிட் -19 நிலைமை குறித்த ஒரு கண்ணோட்டத்தை சுகாதார செயலாளர் வழங்கினார். உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ.எச்.) படி, .ஜி.5 (எரிஸ்) 50 க்கும் அதிகமான நாடுகளில் பதிவாகியுள்ள நிலையில், மாறுபாடு பி..2.86 (பைரோலா) நான்கு நாடுகளில் உள்ளது.

 

கடந்த 7 நாட்களில் உலக அளவில் மொத்தம் 2,96,219 புதிய கொவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ  17% பங்களிக்கும் இந்தியாவில், கடந்த வாரத்தில் 223 தொற்றுகள் (உலகளாவிய புதிய தொற்றுப் பரவலில் 0.075%) மட்டுமே பதிவாகியுள்ளன. புதிய கொவிட் -19 தொற்றுகளின்  தினசரி சராசரி நாடு முழுவதும் 50 க்கும் குறைவாகவே உள்ளது என்றும், வாராந்திர சோதனை நேர்மறை விகிதத்தை 0.2% க்கும் குறைவாக பராமரிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் பரவி வரும் பல்வேறு வகைகளின் மரபணு வரிசைமுறை பற்றிய கண்ணோட்டமும் வழங்கப்பட்டது.

 

விரிவான கலந்துரையாடல்களுக்குப் பின், நாட்டில் கொவிட் -19 சூழல்  நிலையானதாகவும், நாட்டில் பொது சுகாதார அமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறிய  டாக்டர் பி.கே.மிஸ்ரா, மாநிலங்கள் .எல். / எஸ்..ஆர். தொற்றுகளின் போக்குகளைக் கண்காணிக்கவும், முழு மரபணு வரிசைமுறை அதிகரிக்கும் போது கொவிட் -19 சோதனைக்குப்  போதுமான மாதிரிகளை அனுப்பவும், புதிய உலகளாவிய திரிபுருக்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

*****

(Release ID: 1950898)

 

ANU/SM/SMB/KRS



(Release ID: 1950930) Visitor Counter : 107