சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட (ஏபி பி.எம்-ஜே.ஏ.ஒய்) பயனாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில் கணினியில் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக வெளியான ஊடகச்செய்திகள் தவறானவை

Posted On: 17 AUG 2023 4:18PM by PIB Chennai

இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மூன்று நாட்கள் வரை முன் அங்கீகாரத்திற்கான கோரிக்கையைத் தொடங்க மருத்துவமனைகள் அனுமதிக்கப்படுகின்றன, இந்த நேரத்தில், சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் சிகிச்சையின் போது இறக்கின்றனர்

கணினியில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஏபி பிஎம்-ஜேஏஒய் பயனாளிகளுக்கு சிகிச்சைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) சுட்டிக்காட்டியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஒரே பயனாளி ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது கண்டறியப்பட்டதாக செய்திகள் மேலும் கூறுகின்றன. இந்த ஊடகச் செய்திகள் முற்றிலும் தவறானவை.

செப்டம்பர் 2018 முதல் மார்ச் 2021 வரையிலான காலகட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) குறித்த செயல்திறன் தணிக்கை முடிவுகளைக் கொண்ட இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை 2023 ஆம் ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏபி பி.எம்-ஜே.ஏ.ஒய் இன் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு மூன்று நாட்கள் வரை முன் அங்கீகாரத்திற்கான கோரிக்கையைத் தொடங்க மருத்துவமனைகள் அனுமதிக்கப்படுகின்றன என்பது  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இணைப்பு, அவசரகால சூழ்நிலைகள் போன்றவற்றில் சிகிச்சை மறுக்கப்படுவதைத் தவிர்க்க இந்த அம்சம் செயல்படுத்தப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களின் முன் அங்கீகாரம் கோரப்படுவதற்கு முன், அவர்கள் சிகிச்சையின் போது இறந்தனர். அத்தகைய சந்தர்ப்பங்களில், இறப்பு தேதி என்பது சேர்க்கை தேதி அல்லது அதற்கு முந்தைய தேதிக்கு ஒத்ததாக இருக்கும். மேலும், முன் அங்கீகார கோரிக்கையை எழுப்பிய அதே மருத்துவமனையால் இறப்பும் பதிவாகியுள்ளது. எனவே, மருத்துவமனை அமைப்பை   ஏமாற்ற நினைத்திருந்தால்தகவல் தொழில்நுட்பத் தளத்தில்  நோயாளி இறந்துவிட்டதாக அறிவிப்பதில் அது ஆர்வம் காட்டியிருக்காது.

அறிக்கையில் முன்வைக்கப்பட்ட நேர்வுகளில் 50% க்கும் மேற்பட்டவை பொது மருத்துவமனைகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்கள் மோசடி செய்வதற்கு எந்த அவசியமும் இல்லை. ஏனெனில் பணம் மருத்துவமனை கணக்கில்  அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிகிச்சையின் போது மரணம் ஏற்பட்டால், மருத்துவமனை இறப்பு அறிக்கையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

நோயாளி ஒரு தனியார் நோயாளியாக (சுய கட்டணம்) மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பல நிகழ்வுகளும் உள்ளன. ஆனால் பின்னர் இத்திட்டத்தின் கீழ் தனது தகுதியைப் பற்றி அறிந்தவுடன், அவர்  தன்னை இலவச சிகிச்சைக்கான திட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு மருத்துவமனையைக் கோருகிறார். பின் தேதியிடப்பட்ட முன் அங்கீகாரத்தைக் கோருவதற்கான இந்த அம்சம் பயனாளிகளின் செலவினங்களை சேமிக்க உதவுகிறது.

ஒரே நேரத்தில் இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஒரே நோயாளியைப் பொறுத்தவரை, ஏபி பிஎம்-ஜேஏஒய் கீழ், 5 வயது வரையிலான குழந்தைகள் தங்கள் பெற்றோரின் ஆயுஷ்மான் அட்டையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஆயுஷ்மான் அட்டையை இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவருக்கு ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ஒரு தாய் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் மற்றும் சிகிச்சையின் போது அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம், மேலும் தாய் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் பிறப்புக்குப் பிந்தைய  பராமரிப்பு வசதி கிடைக்காமல் போகலாம், எனவே, குழந்தையை  பிறப்புக்குப் பிந்தைய  பராமரிப்பு வசதியுள்ள வேறு ஏதேனும் மருத்துவமனைக்கு மாற்றலாம்.இந்நிலையில், தாயின் ஆயுஷ்மான் அட்டை  ஒரே நேரத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. தந்தையின் ஆயுஷ்மான் அட்டையில் ஒரு தந்தையும் குழந்தையும் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

வழக்கமாக, தாயும் சேயும் ஒரு ஆயுஷ்மான் அட்டையைப் பயன்படுத்தி மட்டுமே சிகிச்சை பெறுகிறார்கள், மேலும் சிகிச்சையின் போது குழந்தை இறந்துவிட்டால், மருத்துவமனை குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கிறது, இது தாயின் அட்டைக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்படுகிறது. தொடர்ந்து, அடுத்த சிகிச்சைக்கு தாய் வரும்போது, அவரது ஆயுஷ்மான் அட்டை  இறந்துவிட்டதாக குறிக்கப்பட்டதை காரணம் காட்டி, அவருக்கு சேவை மறுக்கப்படுகிறது.இதுபோன்ற சந்தர்ப்பங்களில், குறைகள் எழுப்பப்படுகின்றனதாயின் அட்டையில்  இறந்தது பற்றிய தகவல் அகற்றப்படுகிறது.

ஏபி பி.எம்-ஜே.ஏ.ஒய் இன் கீழ் நான்கு கட்ட வலுவான உரிமைகோரல் செயலாக்க அமைப்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மருத்துவமனையின் கூற்றுக்களின் உண்மைத்தன்மை ஆராயப்படுகிறது. இவை களத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. ஒரு மருத்துவமனை ஏதேனும் மோசடி அல்லது துஷ்பிரயோகம் செய்வது கண்டறியப்பட்டால், தவறு செய்யும் மருத்துவமனைக்கு எதிராகப் பணிநீக்கம் உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

ஆயுஷ்மான் பாரத் பிஎம்-ஜேஏஒய் திட்டத்தின் கீழ் பயனாளியை அடையாளம் காணும் செயல்முறை மொபைல் எண்ணுடன் இணைக்கப்படாததால் ஒரு மொபைல் எண் பல பயனாளிகளுடன் தொடர்புடையது என்று சிஏஜி கண்டறிந்துள்ளது. ஏதேனும் தேவை ஏற்பட்டால் பயனாளிகளை அணுகவும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கருத்துக்களை சேகரிக்கவும் மட்டுமே இந்த மொபைல் எண் பதிவு செய்யப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் பி.எம்-ஜே.ஏ.ஒய் ஆதார் அடையாளத்தின் மூலம் பயனாளிகளை அடையாளம் காண்கிறது, இதில் பயனாளி கட்டாய ஆதார் அடிப்படையிலான இ-கே.ஒய்.சி (உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள்) செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறார். ஆதார் தரவுத்தளத்திலிருந்து பெறப்பட்ட விவரங்கள் மூல தரவுத்தளத்துடன் பொருந்துகின்றன, அதன்படி, பயனாளி விவரங்களின் அடிப்படையில் ஆயுஷ்மான் அட்டைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. இதனால், சரிபார்ப்பு செயல்பாட்டில் மொபைல் எண்களின் பங்கு இல்லை.

மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, பயனாளி சரியான மொபைல் எண்ணினை வைத்திருக்கவில்லை அல்லது அவர்கள் வழங்கிய மொபைல் எண் மாற்றப்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்திற்காக பயனாளிகளுக்கான சிகிச்சையை நிறுத்தி வைக்க முடியாது. அதன்படி, ஏபி பி.எம்-ஜே.ஏ.ஒய் சிகிச்சையில்  பயனாளி மொபைல் எண்கள் மிகக் குறைந்த பங்கைக் கொண்டுள்ளன. மேலும், பி.எம்-ஜே.ஏ.ஒய் என்பது உரிமை அடிப்படையிலான திட்டம், பதிவு அடிப்படையிலான திட்டம் அல்ல, எனவே, பயனாளி தரவுத்தளம் நிலையானது மற்றும் புதிய பயனாளிகளைச் சேர்க்க திருத்த முடியாது. எனவே, பயனாளியின் தகுதியை தீர்மானிப்பதில் மொபைல் எண்களுக்கு எந்த பங்கும் இல்லை. எனவே, பயனாளிகள் மொபைல் எண்ணினைப் பயன்படுத்தி சிகிச்சை பெறலாம் என்பது தவறான கணிப்பு.

ஒரே மொபைல் எண்ணை பல பயனாளிகள் பயன்படுத்துவதைப் பொறுத்தவரை, பயனாளி சரிபார்ப்புக்கு மொபைல் எண் கட்டாயமல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், மொபைல் எண்களை சேகரிப்பதற்கான களம் இருந்ததால், திட்ட செயலாக்கத்தின் ஆரம்ப கட்டங்களில் சில சந்தர்ப்பங்களில் களப்பணியாளர்களால் சீரற்ற பத்து இலக்க எண் உள்ளிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆரம்பத்தில், ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்படுத்தப்படவில்லை, ஏனெனில் பல பயனாளிகள் மொபைலை தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை அல்லது அவர்கள் தங்கள் உறவினர் அல்லது அண்டை வீட்டுக்காரரின் எண்ணைப் பகிர்ந்து கொண்டனர். இருப்பினும், மொபைல் எண்களை சரிபார்க்காதது பயனாளி சரிபார்ப்பு செயல்முறையின் சரியான தன்மையையோ அல்லது திட்டத்தின் கீழ் பயனாளிகளின் தகுதியின் செல்லுபடித் தன்மையையோ பாதிக்காது. செல்லுபடியாகும் மொபைல் எண்களை மட்டுமே பெறுவதற்கு என்.எச்.ஏ பயன்படுத்தும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப போர்ட்டலில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய சுகாதார ஆணையம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை சிஏஜி செயல்திறன் தணிக்கை அறிக்கை அடிப்படையில் பரிந்துரைகளை விரிவாக ஆராய்ந்து வருகின்றன.  தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப தளம் மற்றும் செயல்முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் அமைப்பை மேலும் வலுவானதாகவும், திறமையானதாகவும், விவேகமானதாகவும் மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

** 

ANU/SM/SMB/KRS



(Release ID: 1949996) Visitor Counter : 178