மத்திய அமைச்சரவை

மருந்துகளை ஒழுங்குபடுத்தும்துறையில் இந்தியா-சுரினாம்இடையேயான புரிந்துணர்வுஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 AUG 2023 4:24PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய மருந்து ஆணையம், இந்தியக் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் சுரினாம் குடியரசின் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே சுரினாமில் இந்திய மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக 2023 ஜூன் 4 ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்த்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்து, ந்நி செலாவணியை ஈட்ட வழிவகுக்கும். இது , தற்சார்பு இந்தியாவை நோக்கிய ஒரு முயற்சியாகும்.

இந்திய மருந்துகளுக்கு சர்வதேச அங்கீகாரம்! தரநிலைகள் இந்திய மருந்துத் துறைக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் பின்வருவன அடங்கும்:

  • இது இந்த நாடுகளுக்கு இந்திய மருந்து பொருட்களின் ஏற்றுமதியை
  • அதிகரிக்கும், ஏனெனில் இது இரட்டை ஒழுங்குமுறை, சோதனை மற்றும் இறக்குமதிக்கு பிந்தைய சோதனைகளை அகற்றும். இதனால், இந்திய மருந்து ஏற்றுமதியாளர்கள், போட்டி மனப்பான்மையுடன் வர்த்தகம் லாபகரமாக இருக்கும்.
  • மேலும், இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான இந்திய மருந்து பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

இந்தியாவில் இருந்து மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்கவும், மருந்துத் துறையில் படித்த தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

ஆப்கானிஸ்தான், கானா, நேபாளம், மொரீஷியஸ் மற்றும் சுரினாம் குடியரசு ஆகிய ஐந்து நாடுகளால் இந்திய மருந்துகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்துகளை அங்கீகரிக்கும் நாடுகளை விரிவுபடுத்த சுகாதார அமைச்சகம் முயற்சித்து வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1949414

*** 

AD/ANU/IR/RS/GK



(Release ID: 1949498) Visitor Counter : 139