பிரதமர் அலுவலகம்
பருவநிலை நெருக்கடியில் உலகம் சிக்கியுள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முன்முயற்சியை நாம் காட்டியுள்ளோம் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
प्रविष्टि तिथि:
15 AUG 2023 5:08PM by PIB Chennai
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஜி 20 உச்சிமாநாட்டிற்காக "ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" என்ற கருத்தை நாம் முன்வைத்துள்ளோம், அந்த திசையில் செயல்பட்டு வருகிறோம் என்றார். உலகம் காலநிலை நெருக்கடிகளில் சிக்கி திணறி வரும் நிலையில், நாம் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறையை லைப் இயக்கம் மூலம் வழி காட்டியுள்ளோம் என்று அவர் கூறினார்.
உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச சூரியசக்தி கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என்றும், பல நாடுகள் இப்போது சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளன என்றும் பிரதமர் கூறினார். பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்தியுள்ளோம் மற்றும் "பெரிய பூனை கூட்டணி" நிறுவலை முன்னெடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
***
PKV/KRS
(रिलीज़ आईडी: 1949176)
आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam