பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வெற்றி குறித்து பிரதமர் மகிழ்ச்சி

Posted On: 12 AUG 2023 11:48PM by PIB Chennai

நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

"ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற நமது ஆடவர் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது  நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்திறன், நாடு முழுவதும் பெரும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.  நம் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.”

 

**************  

ANU/AP/RB/DL


(Release ID: 1948280) Visitor Counter : 155