பிரதமர் அலுவலகம்
நேபாள பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு
இந்தியா-நேபாளம் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்
நேபாளப் பிரதமர் திரு பிரசண்டாவின் சமீபத்திய இந்தியப் பயணத்தின்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர்
இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையில் நேபாளம் முக்கிய பங்கு வகிக்கிறது
प्रविष्टि तिथि:
05 AUG 2023 6:16PM by PIB Chennai
நேபாள பிரதமர் திரு புஷ்ப கமல் தஹல் பிரசண்டாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.
இந்தியா-நேபாள இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். மேலும் நேபாளப் பிரதமர் திரு பிரசண்டா, 2023 மே 31 முதல் ஜூன் 3 வரை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டபோது நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இன்று இரு தலைவர்களும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேச்சு நடத்தினர்.
நெருங்கிய மற்றும் நட்புடன் கூடிய அண்டை நாடான நேபாளம், இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' கொள்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்நிலை பரிமாற்றங்களின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் அமைந்துள்ளது.
***
SM/PLM/DL
(रिलीज़ आईडी: 1946087)
आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam