பிரதமர் அலுவலகம்
ராஜஸ்தானில் பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பங்கேற்பது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டர் செய்தி வெளியீடு
प्रविष्टि तिथि:
27 JUL 2023 10:42AM by PIB Chennai
ராஜஸ்தானில் பிரதமரின் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பது குறித்து அம்மாநில முதல்வரின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் அலுவலகம் பின்வரும் தகவலை ட்விட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சிகார் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவு:
“திரு அசோக் கெலாட் @ashokgehlot51 அவர்களே,
நெறிமுறையின்படி, நீங்கள் முறையாக அழைக்கப்பட்டுள்ளீர்கள், உங்கள் உரைக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களால் கலந்து கொள்ள இயலாது என்று உங்கள் அலுவலகம் தெரிவித்தது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் @narendramodi முந்தைய வருகைகளின் போதும் நீங்கள் எப்போதும் அழைக்கப்பட்டுள்ளீர்கள், அந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள்.
இன்றைய நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உங்களை வரவேற்கிறோம். வளர்ச்சிப் பணிகளின் பெயர் பலகையிலும் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் உங்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஏதேனும் உடல் அசௌகரியம் இல்லாவிட்டால், உங்கள் பங்கேற்பு அதிக முக்கியத்துவம் பெறும்.”
***
(Release ID: 1943114)
ANU/BR/AG
(रिलीज़ आईडी: 1943137)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam