குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநிலங்களவைக்கு தலைமை ஏற்ற நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் எஸ். பாங்னான் கொன்யாக்

Posted On: 25 JUL 2023 4:41PM by PIB Chennai

வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக, மாநிலங்களவைக்கு நாகாலாந்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் திருமதி பாங்னான் கொன்யாக் இன்று (25.07.2023) அவைக்குத் தலைமை தாங்கினார். முன்னதாக ஜூலை 17, 2023 அன்று துணைத் தலைவர்கள் குழுவில் நியமிக்கப்பட்ட பெண் உறுப்பினர் என்ற வரலாற்றை அவர் படைத்தார்.

பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையாக, மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தங்கர் கடந்த வாரம் நான்கு பெண் உறுப்பினர்களை (மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதம்) துணைத் தலைவர்கள் குழுவுக்கு பரிந்துரைத்தார்.

இந்த குழுவில் பரிந்துரைக்கப்படும் அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னர் மாற்றி அமைக்கப்பட்ட துணைத் தலைவர்கள் குழுவில் மொத்தம் எட்டு பெயர்கள் இடம் பெற்று இருந்தன. அவர்களில் பாதி பேர் பெண்கள்.  மாநிலங்களவை வரலாற்றில் துணைத் தலைவர் குழுவில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

துணைத் தலைவர் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் விவரங்கள்:

திருமதி பி.டி.உஷா: இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். புகழ்பெற்ற தடகள வீரர் ஆவார். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

  

திருமதி எஸ்.பாங்னோன் கொன்யாக்: இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். ஏப்ரல், 2022 இல் நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.

டாக்டர் பௌசியா கான்: இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2020 ஏப்ரலில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திருமதி சுலதா தியோ: இவர் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இவர் ஜூலை 2022 இல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                  ***

ANU/PLM/KPG

 

 (Release ID: 1942529) Visitor Counter : 136