பிரதமர் அலுவலகம்
ஃபிரான்ஸ் விண்வெளி வீரர், விமானி மற்றும் நடிகர் தாமஸ் பெஸ்கெட் உடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
14 JUL 2023 10:06PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஃபிரான்ஸ் நாட்டின் விண்வெளிப் பொறியாளரும், விமானியும், ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரரும், நடிகருமான திரு. தாமஸ் பெஸ்கெட்டை பாரிஸில் 14 ஜூலை 2023 அன்று சந்தித்தார்.
விண்வெளித் துறையில், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிப்பதிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதமர் திரு. பெஸ்கெட்டுடன் பகிர்ந்து கொண்டார். இளைஞர்களை ஊக்குவிக்கவும், விண்வெளித் துறை ஒத்துழைப்பை ஆராயவும் இந்தியாவுக்கு வருகை தருமாறு திரு. பெஸ்கெட்டுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
ஒரு விண்வெளி வீரராக தனது அனுபவங்களை திரு. பெஸ்கெட் பிரதமருடன் பகிர்ந்து கொண்டார், மேலும், எதிர்கால விண்வெளி திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் சாத்தியமான வரையறைகள் குறித்து விவாதித்தார்.
***
AP/ASD/DL
(रिलीज़ आईडी: 1939700)
आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam