பிரதமர் அலுவலகம்
ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUL 2023 5:12PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் நகருக்கு 13 ஜூலை 2023 பிற்பகலில் சென்றார்.
அவரை ஃபிரான்ஸ் நாட்டுப் பிரதமர் மேதகு திருமதி எலிசபத் போர்ன், விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்றார். அதைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஃபிரான்ஸ் அதிபர் மேதகு திரு. இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் பாரீஸில் நடைபெறும் ‘பிரான்ஸ் தேசிய தினம்’ அல்லது பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்தியா-ஃபிரான்ஸ் இடையேயான உத்தி சார்ந்த கூட்டாண்மையின் 25-வது ஆண்டு நிறைவையும் இப்பயணம் குறிக்கிறது.
***
AP/SMB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 1939255)
வருகையாளர் எண்ணிக்கை : 263
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam