பிரதமர் அலுவலகம்

ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அர்ப்பணிக்கவும் ஜூலை 7-8 தேதிகளில் 4 மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 05 JUL 2023 11:48AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி  2023, ஜூலை 7-8 தேதிகளில் 4 மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூலை 7ஆம் தேதியும்  தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் ஜூலை 8 ஆம் தேதியும் அவர் பயணம் மேற்கொள்வார்

ஜூலை 7-ம் தேதி, காலை 10:45 மணியளவில், ராய்ப்பூரில் நடைபெறும் பொதுநிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார். பிற்பகல் 2:30 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் பிரதமர், அங்கு கீதா பதிப்பக நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து கோரக்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். அதன்பின்னர், மாலை 5 மணியளவில், பிரதமர் வாரணாசி செல்வார். அங்கு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், பல வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார்.

ஜூலை 8 ஆம் தேதி, காலை 10:45 மணியளவில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் செல்லும் பிரதமர், அங்கு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். மாலை 4:15 மணியளவில் பிகானீர் செல்லும் பிரதமர், அங்கு ராஜஸ்தானின் பலவகை வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து  அடிக்கல் நாட்டுவார்.

ராய்ப்பூரில் பிரதமர்

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பெரிய உந்துதலாக, ரூ.6,400 கோடி மதிப்பிலான ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டங்களில் ஜபல்பூர்-ஜக்தல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ராய்ப்பூர் முதல் கோடெபோட் வரையிலான 33 கிமீ நீளமுள்ள 4-வழிப்பாதையும் அடங்கும். இது சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, மூலப் பொருட்கள், ஜக்தல்பூருக்கு அருகிலுள்ள எஃகு ஆலைகளில்  தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் இரும்புத் தாது நிறைந்த பகுதிகளுக்கும்  இணைப்பை வழங்கும். என்எச்-130-ன் பிலாஸ்பூர் - அம்பிகாபூர் பிரிவில்  53 கிமீ நீளமுள்ள பிலாஸ்பூர்-பத்ரபாலி வரையிலான  4-வழிப்பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது உத்தரப் பிரதேசத்துடன் சத்தீஸ்கரின் இணைப்பை மேம்படுத்த உதவுவதோடு அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு இணைப்பை வழங்குவதன் மூலம் நிலக்கரி கொண்டு செல்வதை அதிகரிக்கும்.

பசுமைப்பகுதி ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் 6 வழிச்சாலை வழித்தடத்தில் சத்தீஷ்கர் பகுதிக்கான மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டங்கள் தாம்தாரியில் உள்ள அரிசி ஆலைகளுக்கும், காங்க்கரில் உள்ள பாக்சைட் வளம் நிறைந்த பகுதிகளுக்கும் சிறந்த இணைப்பை வழங்குவதோடு, கொண்டகானில் உள்ள கைவினைத் தொழிலுக்கும் பயனளிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலை அளிக்கும்.

750 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டுள்ள 103 கிலோமீட்டர் நீள ராய்ப்பூர் - காரியார் சாலை இரட்டை ரயில் பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இது சத்தீஸ்கரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி, எஃகு, உரங்கள் மற்றும் பிற பொருட்களை துறைமுகங்களில் இருந்து கொண்டு செல்வதை எளிதாக்கும். கியோட்டி - அன்டகரை இணைக்கும் 17 கிமீ நீளமுள்ள புதிய ரயில் பாதையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ. 290 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை, டல்லி ராஜ்ஹாரா மற்றும் ரெளகட் பகுதிகளின் இரும்புத் தாது சுரங்கங்களுடன் பிலாய் எஃகு ஆலைக்கு இணைப்பை வழங்கும். தெற்கு சத்தீஸ்கரின் அடர்ந்த காடுகள் வழியாக செல்லும் தொலைதூர பகுதிகளை இணைக்கும்.

கோர்பாவில் ரூ.130 கோடி  செலவில் கட்டப்பட்டஆண்டுக்கு 60 ஆயிரம் மெட்ரிக் டன் நிரப்புதிறன் கொண்ட இந்திய எண்ணெய்க் கழகத்தின் எரிவாயு சிலிண்டர் தொழிற்சாலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும், ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுக்கு 75 லட்சம் அட்டைகள் வழங்குவதையும் பிரதமர் தொடங்கிவைப்பார்.

கோரக்பூரில் பிரதமர்

கோரக்பூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்குச் செல்லும் பிரதமர், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த பதிப்பகத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் அவர் சித்தராமையா சிவபுராண நூலை வெளியிடுவார். கீதா பதிப்பக உள்ள லீலா சித்ரா கோயிலுக்கும் பிரதமர் செல்வார்.

கோரக்பூர் ரயில் நிலையத்தில் இரண்டு வந்தே பாரத் ரயில்களைப் பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைப்பார். அந்த இரண்டு ரயில்களான: கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர் - அகமதாபாத் (சபர்மதி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அயோத்தி வழியாகச் செல்லும். மேலும் மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவுக்கும் ஊக்கமளிக்கும். ஜோத்பூர் - சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஜோத்பூர், அபு சாலை, அகமதாபாத் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு  இந்தப் பகுதியில் சமூக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

கோரக்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த ரயில் நிலையம் சுமார் ரூ.498 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த  வசதிகளை வழங்கும்.

வாரணாசியில் பிரதமர்

வாரணாசி பொது நிகழ்ச்சியின் போது, ரூ. 12,100 கோடி  மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப்  பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டுவார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு- அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு வழித்தடத்தின் சோன் நகர் ரயில் பாதை ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கிவைப்பார். ரூ.6760 கோடி  செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாதை, சரக்குகளை விரைவாகவும் குறைந்த எரிசக்தியிலும் கொண்டு செல்ல உதவும். ரூ. 990 கோடிக்கும் கூடுதலான செலவில் மின்மயமாக்கல் அல்லது இரட்டைப் பாதைப் பணிகள் முடிக்கப்பட்ட மூன்று ரயில் தடங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் ரயில் பாதைகளில் 100 சதவீதம் மின்மயமாக்கல் நிறைவடையும்.

என்எச்-56 இன் வாரணாசி-ஜான்பூர் பிரிவின் நான்கு வழிப்பாதை விரிவாக்கத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது ரூ 2750 கோடிக்கும் அதிகமான செலவில் முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலை  வாரணாசியில் இருந்து லக்னோவிற்கான பயணத்தை எளிதாகவும் வேகமாகவும் மேற்கொள்ளலாம்.

வாரணாசியில் பிரதமரால் தொடங்கி வைக்கப்படும் பல திட்டங்களில் 18 பொதுப்பணித்துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவையும் அடங்கும்; பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சர்வதேச பெண்கள் விடுதி கட்டிடம்; கர்சரா கிராமத்தில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் இன்ஜினியரிங் & டெக்னாலஜி நிறுவனம் (சிப்பெட்) தொழிற்பயிற்சி மையம்; சிந்தாவுரா, பிஏசி புல்லன்பூர், தீயணைப்பு நிலையம், பிந்த்ரா மற்றும் அரசு குடியிருப்புப் பள்ளி தர்சாடாவில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வசதிகள்; பொருளாதார குற்றங்கள் ஆராய்ச்சி அமைப்பு கட்டிடம்; மோகன் கத்ராவிலிருந்து கோனியா காட் வரையிலான கழிவுநீர் பாதை மற்றும் ராம்னா கிராமத்தில் நவீன கழிவுநீர் மேலாண்மை அமைப்பு; 30 இரட்டை பக்க பின்னொளி எல்இடி யூனிபோல்கள்; ராம்நகர் என்டிடிபி  பால் ஆலையில் பசுவின் சாணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உயிரி-வாயு ஆலைகங்கை நதியில் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக தசாஷ்வமேத் படித்துறையில்  ஒரு தனித்துவமான மிதக்கும் உடை மாற்றும் அறை ஆகியவற்றை துவக்கியும் திறந்தும் வைப்பார்.

பிரதமரால் அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களில், சௌகண்டி, கதிபூர் மற்றும் ஹர்தத்தாபூர் ரயில் நிலையங்களுக்கு அருகில் 3 இருவழி ரயில் மேம்பால  கட்டுமானமும் அடங்கும்; வியாஸ்நகர் கட்டுமானம்பண்டிட்  தீன்தயாள் உபாத்யாயா சந்திப்பு ரயில்வே மேம்பாலம்; பொதுப்பணித் துறையின் 15  சாலைகள் கட்டுமானம் மற்றும் புதுப்பித்தல். இந்தத் திட்டங்கள் சுமார் ரூ.780 கோடி செலவில் உருவாக்கப்படும்.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், ரூ 550 கோடிக்கும் அதிகமான செலவில் நிறைவேற்றப்படவுள்ள  192 கிராமப்புற குடிநீர் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதன் மூலம் 192 கிராமங்களில் உள்ள 7 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

மணிகர்னிகா மற்றும் ஹரிச்சந்திரா படித்துறைகளின் மறுவடிவமைப்புக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார். இந்தப்படித்துறைகளில், பொதுமக்களுக்கான  வசதிகள், காத்திருப்புப் பகுதிகள்கழிவுகளை அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தகனமேடைகள்  ஆகியவை இருக்கும்.

தசாஷ்வமேத் படித்துறைகர்சரா சிப்பெட் வளாகத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி கட்டுவது போன்றுவாரணாசியில் கங்கை நதியில் உள்ள சமய முக்கியத்துவம் வாய்ந்த ஆறு குளியலறைகளில் மிதக்கும் உடை மாற்றும் அறை தளங்கள் அமைக்கப்படும்.

நிகழ்ச்சியின் போது, உத்தரபிரதேசத்தில், 1.25 லட்சம்  பிஎம் ஸ்வநிதி கடன்கள், பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் கட்டப்பட்ட 5 லட்சம் கிராமப்புற வீடுகளின் சாவிகள், 2.88 லட்சம் ஆயுஷ்மான் பாரத் அட்டைகளை பிரதமர் வழங்குகிறார்.

வாரங்கலில் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் சுமார் ரூ. 6,100 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.

ரூ 5,500 கோடி மதிப்பிலான 176 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் 108 கிமீ நீளமுள்ள மஞ்சேரியல் - வாரங்கல் பகுதி  இத்திட்டங்களில் அடங்கும். இந்தப் பிரிவானது மஞ்சேரியலுக்கும் வாரங்கலுக்கும் இடையிலான தூரத்தை சுமார் 34 கிமீ குறைக்கும், இதனால் பயண நேரம் குறையும். என்எச்-44 மற்றும் என்எச்-65 இல் போக்குவரத்து நெரிசல் குறையும். என்எச்-563 இன் 68 கிமீ நீளமுள்ள கரீம்நகர் - வாரங்கல் பகுதியை தற்போதுள்ள இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பாக மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். இது ஹைதராபாத்-வாரங்கல் தொழில் வழித்தடம், காகதியா மெகா ஜவுளி பூங்கா, வாரங்கலில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்த உதவும்.

காசிப்பேட்டையில் ரூ 500 கோடியில் உருவாக்கப்படும் ரயில்வே உற்பத்தி அலகுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இது சமீபத்திய தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் வேகன்களின் ரோபோட்டிக் பெயிண்டிங், அதிநவீன இயந்திரங்கள், நவீன பொருள் சேமிப்பு கையாளுதலுடன் கூடிய ஆலை போன்ற வசதிகளுடன் இணைக்கப்படும்இது உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும்.

பிகானீரில் பிரதமர்

பிகானீரில் பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, ரூ. 24,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவார்.

அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி பசுமை விரைவுச் சாலைப் பகுதியை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ராஜஸ்தானில் 500 கி.மீ.க்கு மேல் பரவியுள்ள இந்தப் பகுதி, ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஜக்தவாலி கிராமத்திலிருந்து ஜலோர் மாவட்டத்தில் உள்ள கெட்லாவாஸ் கிராமம் வரை செல்கிறது, இது சுமார் ரூ. 11,125 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளதுஇந்த விரைவுச் சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைப்பதுடன், முக்கிய நகரங்கள் மற்றும் தொழில்துறை வழித்தடங்களுக்கு  இடையேயான இணைப்பை மேம்படுத்தும். இந்த அதிவேக நெடுஞ்சாலையானது சரக்குகளின் தடையற்ற போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்தும்.

பிராந்தியத்தில் மின் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், சுமார் ரூ. 10,950 கோடி மதிப்பிலான பசுமை மின்சார வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான பகிர்மான லைனின்  முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பசுமை மின்சார வழித்தடமானது சுமார் 6 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்கும்மேற்கு பிராந்தியத்தில் அனல் மின்சார உற்பத்தி, வடக்கு பிராந்தியத்தில் நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை  சமநிலைப்படுத்தி, அதன் மூலம் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியத்திற்கு இடையே பகிர்மான  திறனை இது வலுப்படுத்தும்பிகானீர் பிவாடி டிரான்ஸ்மிஷன் லைனையும்   பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மின்தொகுப்பு மூலம் சுமார் ரூ. 1,340 கோடி செலவில், ராஜஸ்தானில் 8.1 ஜிகாவாட் சூரிய சக்தியை வெளியே கொண்டு செல்ல பிகானீர் - பிவாடி டிரான்ஸ்மிஷன் லைன் உதவும்.

பிகானீரில் 30 படுக்கைகள் கொண்ட மாநில காப்பீட்டுக் கழகத்தின்  (இஎஸ்ஐசி) ஊழியர்களுக்கான புதிய மருத்துவமனையை பிரதமர் அர்ப்பணிக்கிறார். மருத்துவமனை 100 படுக்கைகளாக மேம்படுத்தக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். இந்த மருத்துவமனை, உள்ளூர் சமூகத்தின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அணுகக்கூடிய மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்கும்  ஒரு முக்கிய மருத்துவமனையாக  செயல்படும்.

ரூ.450 கோடி செலவில் மறுசீரமைக்கப்படவுள்ள  பிகானீர் ரயில் நிலையப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ரயில் நிலையத்தின் தற்போதைய கட்டமைப்பின் பாரம்பரிய நிலையைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், தரையமைப்பு மற்றும் கூரையுடன் அனைத்து பிளாட்பாரங்களையும் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

43 கிலோமீட்டர் நீளமுள்ள சுரு - ரத்தன்கர் பகுதியில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான அடிக்கல்லும் பிரதமரால் நாட்டப்படும். இந்த ரயில் பாதையை இரட்டிப்பாக்குவது, இணைப்பை மேம்படுத்தும், ஜிப்சம், சுண்ணாம்பு, உணவு தானியங்கள் மற்றும் உரப் பொருட்களை பிகானீர் பகுதியில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு எளிதாகக் கொண்டு செல்வதற்கு இது வசதியாக இருக்கும்.

----

SM/SMB/PKV/KPG



(Release ID: 1938827) Visitor Counter : 129