பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2023, ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
10 JUL 2023 12:17PM by PIB Chennai
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 31, ஜூலை 2023-ல் இருந்து ஆகஸ்ட் 31,2023-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுகள், 2024-ற்கான விண்ணப்பங்களின் பதிவு தேசிய விருதுகள் இணையதளத்தில் (https://awards.gov.in, ) தற்போது தொடங்கியுள்ளன. இவ்விருதுகள் வீர தீரம், விளையாட்டுக்கள், சமூகசேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியக் குடிமகனாக உள்ள இந்தியாவில் வசிக்கும் 18 வயதுக்கு மிகாத எந்தவொரு சிறுவர், சிறுமியரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அதேபோல், இவ்விருதுக்காக மற்ற நபர்களும் சிறுவர், சிறுமிகளை பரிந்துரைக்கலாம். பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதுக்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in, என்ற இணையதளத்தில் மட்டும் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938382
AP/IR/RS/GK
***
(रिलीज़ आईडी: 1938466)
आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam