பிரதமர் அலுவலகம்
பெர்லினில் நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிய தடகள வீரர்களுக்குப் பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
28 JUN 2023 9:38AM by PIB Chennai
பெர்லினில் நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற தடகள வீரர்கள் சிறப்பாக விளையாடி மொத்தமாக 202 பதக்கங்களை பெற்றுள்ளனர். அதில் 76 தங்கப் பதக்கங்களும் அடங்கும். இதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“பெர்லினில் நடைபெற்ற கோடை கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் சார்பாக பங்கேற்ற தடகள வீரர்கள் சிறப்பாக விளையாடி மொத்தமாக 202 பதக்கங்களை பெற்றதில் 76 தங்கப் பதக்கங்களும் அடங்கும். இதற்கு எனது பாராட்டுக்கள். இந்த வெற்றிப் பாதையில் அவர்களுடைய ஒற்றுமை உணர்வும், விடா முயற்சியையும் நாம் கொண்டாடுவோம்”.
***
(Release ID: 1935783)
AP/GS/RR
(रिलीज़ आईडी: 1935825)
आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam