பிரதமர் அலுவலகம்
அமெரிக்காவின் முன்னணி சுகாதார நிபுணர்களுடன் பிரதமரின்சந்திப்பு
Posted On:
21 JUN 2023 9:06AM by PIB Chennai
அமெரிக்காவின் நியூயார்க்கில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அமெரிக்க முன்னணி நிபுணர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.
தரமான சுகாதார கவனிப்புக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, ஒருங்கிணைந்த மருந்துகள் மீது அதிக கவனம் செலுத்துவது, சிறந்த சுகாதாரக் கவனிப்புக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமரும், நிபுணர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பில் பங்கேற்ற நிபுணர்கள் பற்றிய விவரம்:
- டாக்டர் பீட்டர் ஹோட்டெஸ், டெக்சாசில் உள்ள வெப்ப மண்டல மருந்துகளுக்கான தேசியப் பள்ளியின் நிறுவக டீன்
- டாக்டர் சுனில் ஏ.டேவிட், டெக்சாசில் உள்ள வைரோ வேக்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி.
- டாக்டர் ஸ்டீபன் கிளாஸ்கோ, ஜெனரல் கேட்டலிஸ்ட் எனும் மூலதன நிறுவனத்தின் ஆலோசகர்
- டாக்டர் லாடன் ஆர்.பர்ன்ஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் பள்ளி, சுகாதார கவனிப்பு நிர்வாகத்தின் பேராசிரியர்.
- டாக்டர் விவியன் எஸ்.லீ, வெரிலி லைஃப் சயின்சஸ் நிறுவகத் தலைவர்.
- டாக்டர் பீட்டர் ஆக்ரே, மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர், பொது சுகாதாரத்திற்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பள்ளி மற்றும் மருந்துகளுக்கான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பள்ளியின் மூலக்கூறு உயிரியலாளர்.
***
(Release ID: 1933810)
SM/SMB/RR/KRS
(Release ID: 1934140)
Visitor Counter : 105
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam