பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு உள்ளீடுகளை பிரதமர் வரவேற்கிறார்

Posted On: 13 JUN 2023 8:11PM by PIB Chennai

வரும் 18-ந் தேதி ஒலிபரப்பாக உள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு மக்களிடமிருந்து உள்ளீடுகளை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 18-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. உங்களது உள்ளீடுகளை வரவேற்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதாகும். உங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை நமோ செயலி, மை கவ் அல்லது 1800117800 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது செய்தியை பதிவு செய்யலாம்.

 

***



 

AD/PKV/RR/GK

 


(Release ID: 1932234) Visitor Counter : 158