பிரதமர் அலுவலகம்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
இந்தியா – அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சி குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுலிவன் பிரதமரிடம் விளக்கினார்
பிரதமர் மோடியை அமெரிக்காவில் வரவேற்க அதிபர் பைடன் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக சுலிவன் எடுத்துரைத்தார்
இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான சர்வதேச உத்திசார் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கும் வலுப்பெற்று வருவதற்கும் பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்
அதிபர் பைடனுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாக பிரதமர் மோடி எடுத்துரைத்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUN 2023 8:02PM by PIB Chennai
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜாக் சுலிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (13.06.2023) சந்தித்துப் பேசினார். இந்தியா – அமெரிக்கா இடையே பல்வேறு துறைகளின் இருதரப்பு ஒத்துழைப்பு வளர்ச்சிக் குறித்து அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுலிவன், பிரதமரிடம் விளக்கினார். பிரதமர் மோடியை அமெரிக்காவில் வரவேற்க அதிபர் பைடன் ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக சுலிவன் எடுத்துரைத்தார்.
இந்தியா – அமெரிக்கா இடையே விரிவான சர்வதேச உத்திசார் ஒத்துழைப்பு வளர்ந்து வருவதற்கும் வலுப்பெற்று வருவதற்கும் பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அதிபர் பைடனுடன் இருதரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள், இருநாடுகளும் எதிர்கொள்ளும் பொதுவான சர்வதேச பிரச்சனைகள் போன்றவை குறித்து கலந்துரையாடுவதற்கு தாம் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தமது அமெரிக்கப் பயணம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி, சுலிவனிடம் எடுத்துரைத்தார்.
***
AP/KPG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1932112)
வருகையாளர் எண்ணிக்கை : 250
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam