மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது
Posted On:
12 JUN 2023 5:07PM by PIB Chennai
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக குஜராத் அரசு மற்றும் மத்திய அமைச்சகங்கள், அமைப்புகளின் தயார் நிலை குறித்து அமைச்சரவைச் செயலாளர் திரு ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்பட்டது.
அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் குழுவிடம் விளக்கினார்.
இப்புயல் 14-ம் தேதி காலை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, ஜூன் 15 அன்று நண்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவித்தார்.
இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் படகுகள் இதுவரை நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 10 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் மற்றும் மூன்று கூடுதல் குழுக்கள் ஏற்கனவே குஜராத்தில் தயார் நிலையில் உள்ளன. அரக்கோணம் (தமிழ்நாடு), முண்ட்லி (ஒடிசா), பதின்டா (பஞ்சாப்) ஆகிய பகுதிகளில் தலா ஐந்து குழுக்கள் என 15 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931699
***
AD/IR/RS/GK
(Release ID: 1931796)
Visitor Counter : 156