பிரதமர் அலுவலகம்
கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வில் சாதனை படைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் பாராட்டு
Posted On:
10 JUN 2023 7:53PM by PIB Chennai
கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான ஜி20 மக்கள் பங்கேற்பு நிகழ்வில் சாதனை படைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் குறித்து கவனம் செலுத்தும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம், "அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியலை உறுதிசெய்தல் " என்ற கருப்பொருளை ஊக்குவிப்பதையும் ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உட்பட 1.5 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை இந்த முயற்சியில் ஆர்வத்துடன் இணைந்துள்ளனர்.
கல்வி அமைச்சரின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;
"இந்த சாதனை பங்கேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன். இது உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான நமது பகிரப்பட்ட பார்வையை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தில் பங்கேற்று வலுப்படுத்திய அனைவருக்கும் பாராட்டுகள்’’ .
***
SM/PKV/DL
(Release ID: 1931414)
Visitor Counter : 216
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam