பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUN 2023 10:44AM by PIB Chennai

ஓபன் ஏ.ஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன், பிரதமர் திரு நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார்.

திரு சாம் ஆல்ட்மேனின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்ததாவது:

“உள்ளார்ந்த கலந்துரையாடலை மேற்கொண்டதற்காக திரு சாம் ஆல்ட்மேனுக்கு நன்றி. இந்தியாவின் தொழில்நுட்ப சூழலியலை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவின் திறன், குறிப்பாக, நமது இளைஞர்களிடையே  அபரிமிதமாக உள்ளது. நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, நமது டிஜிட்டல் மாற்றத்திற்கு வலு சேர்க்கும் அனைத்து கூட்டுமுயற்சிகளையும் வரவேற்கிறோம்.”

***

AP/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 1930944) வருகையாளர் எண்ணிக்கை : 253