பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தலைமையின் கீழ் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு

Posted On: 30 MAY 2023 8:15PM by PIB Chennai

இந்தியா 16 செப்டம்பர் 2022 அன்று சமர்கண்ட் உச்சிமாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) சுழல் தலைமைப் பொறுப்பை முதன்முறையாக ஏற்றது. முதல்முறையாக இந்தியாவின் தலைமையின் கீழ் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) தலைவர்கள் கவுன்சிலின் 23வது உச்சிமாநாடு இணைய வழியில் 4 ஜூலை 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.

 

அனைத்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளும், அதாவது. சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக அழைக்கப்பட்டுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாரம்பரியத்தின்படி, துர்க்மெனிஸ்தானும் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. செயலகம் மற்றும் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (SCO RATS) ஆகிய இரண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு(SCO) அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொள்வார்கள். இங்கிலாந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,  காமன்வெல்த் நாடுகள், கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு, யூரேசிய பொருளாதார ஒன்றியம், சிஐசிஏ ஆகிய ஆறு சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 

 

உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'பாதுகாப்பான SCO ஐ நோக்கி' என்பதாகும்.  2018 SCO உச்சிமாநாட்டில் பிரதமரால் உருவாக்கப்பட்ட (SECURE)  என்ற கருப்பொருள் பாதுகாப்பு(Security), பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்(Economy and Trade), இணைப்பு(Connectivity), ஒற்றுமை(Unity), இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை(Respect for Sovereignty and Territorial Integrity) மற்றும் சுற்றுச்சூழல்(Environment) ஆகியவற்றை உள்ள்டக்கியதாகும். இவை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) நமது நாடு தலைமை வகித்தபோது உக்கியத்துவம் அளிக்கப்பட்ட கருப்பொருள்கள்.

 

இந்தியா அதன் தலைமைத்துவத்தில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், பாரம்பரிய மருத்துவம், டிஜிட்டல் உள்ளடக்கம், இளைஞர் அதிகாரம் மற்றும் பகிரப்பட்ட பௌத்த பாரம்பரியம் ஆகியவற்றில் ஒத்துழைப்பின் புதிய தூண்களை அமைத்துள்ளது. கூடுதலாக, நமது நாடுகளுக்கிடையேயான வரலாற்று மற்றும் நாகரீக பிணைப்புகளைக் கொண்டாடும் மக்களுக்கிடையிலான உறவுகளை வளர்ப்பதில் இந்தியா பணியாற்றியுள்ளது.  2022-23 ஆம் ஆண்டிற்கான முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கலாச்சார மற்றும் சுற்றுலா மூலதன கட்டமைப்பின் கீழ் வாரணாசியில் நடைபெற்ற பல்வேறு சமூக-கலாச்சார நிகழ்வுகள் அடங்கும்.

 

SCO இன் இந்தியாவின் தலைமைப் பொறுப்பானது, உறுப்பு நாடுகளுக்கு இடையே தீவிரமான செயல்பாடு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் காலமாகும். 14 அமைச்சர்கள் அளவிலான கூட்டங்கள் உட்பட மொத்தம் 134 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை இந்தியா நடத்தியது. அமைப்பில் இந்தியா நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்பதோடு தலைமைப்  பொறுப்பின் உச்சக்கட்டமாக வெற்றிகரமான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சிமாநாட்டை எதிர்நோக்குகிறது.

 

***

SM/CJL/DL


(Release ID: 1929702) Visitor Counter : 556