தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசின் கொள்கைகள் எவ்வாறு நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்பதை தேசிய மாநாடு விவாதிக்கிறது

Posted On: 27 MAY 2023 5:44PM by PIB Chennai

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் பிரதிநிதிகள் புது தில்லி விஞ்ஞான் பவனில் "ஜன் ஜன் கா விஸ்வாஸ்" என்ற தலைப்பில் ஓர் அமர்வில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களித்தன என்பதைப் பற்றி விவாதித்தனர். பிரசார் பாரதியால் ஏற்பாடு செய்யப்பட்ட "தேசிய மாநாடு: 9 ஆண்டுகள் சேவை நல்லாட்சி ஏழைகளின் நல்வாழ்வு "மாநாட்டில் இந்த அமர்வு நடைபெற்றது.

 

இந்திய குத்துச்சண்டை வீரரும், 2 முறை உலக சாம்பியனுமான நிகத் ஜரீன், அரசின் முதன்மைத் திட்டமான கேலோ இந்தியா இந்திய விளையாட்டுத் திறமைகளுக்கு சிறகுகளை வழங்கியுள்ளது. இளம் மற்றும் திறமையான இந்தியர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் விளையாட்டுகளில் சிறந்து விளங்க உதவியது. தன்னைப் போன்ற பெண்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் "பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்" திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றியும் அவர் பேசினார்.

 

நடிகர் நவாசுதீன் சித்திக், பல ஆண்டுகளாக போக்குவரத்து மிகவும் எளிதாகிவிட்டது என்றார். எந்தவொரு இளைஞனுக்கும் இன்று தனது கனவுகளை நனவாக்க நிறைய ஆதரவு அமைப்புகள் உள்ளன என்றார். "பெண்குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்" திட்டத்தால் பெண் குழந்தைகளுக்கான கண்ணோட்டமும் மனநிலையும் இப்போது மாறிவிட்டது என்று கூறினார்.

 

சீகோவின் இணை நிறுவனர் திவ்யா ஜெயின் பார்வையாளர்களிடம் கூறுகையில், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 7 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் சேர்ந்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஒரு ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோராக பேசிய திவ்யா ஜெயின், கடந்த ஆண்டில் இந்தியா மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டை கண்டதாகக் கூறினார்.

 

அந்தமான் & நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த மருத்துவ செவிலியர், சுகாதார நிபுணர் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற சாந்தி தெரசா லக்ரா கூறுகையில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கிய மையங்கள் மற்றும் குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி  உள்நாடு மற்றும் உள்காடுகளில் வசிக்கும் பழங்குடியினரைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்றார்.

 

சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் பிரகாஷ் ஜோஷி கூறுகையில், நாடு இப்போது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள செழுமையைக் கொண்டுவருவது குறித்து சிந்திக்கிறது என்று குறிப்பிட்டார்.

 

ஒவ்வொரு மாணவர்களைச் சென்றடைவதற்கும், கல்வி முறையை வலுப்படுத்துவதற்கும் அரசு கொள்கைகளை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக, அடிப்படைக் கற்றலில் இந்தியா முதலீடு செய்துள்ளது. மேலும் குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் பள்ளிகளில் வைத்திருப்பதை உறுதி செய்கிறது என்றும் தெரிவித்தார்.

***

AP/CJL/DL



(Release ID: 1927776) Visitor Counter : 120