பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதிய நாடாளுமன்ற கட்டடம் இந்தியர் ஒவ்வொருவருக்கும் பெருமிதத்தை அளிக்கும்: பிரதமர்


தம்மால் பகிரப்பட்ட வீடியோ குறித்த தங்களின் உணர்வுகளைக் குரல் பதிவு செய்யுமாறு குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 26 MAY 2023 6:02PM by PIB Chennai

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கான குடிமக்களின் குரல் பதிவு வடிவிலான எண்ணங்களைத் திரு மோடி அதில்  கோரியுள்ளார்.      

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டடத்தின் தோற்றத்தை வீடியோ வழங்குகிறது. உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற உங்களின் சொந்தக் குரலுடன் இந்த வீடியோவைப் பகிருமாறு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இவற்றில் சிவற்றை ட்விட்டரில் நான் மறுபதிவு செய்வேன். #MyParliamentMyPride என்பதைப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.”

******

AD/SMB/MA/KPG

 


(रिलीज़ आईडी: 1927591) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam