பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணம் குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 19 APR 2023 2:52PM by PIB Chennai

பிரதமரின் மலிவு விலை மக்கள் மருந்தகங்களை ஜி20 பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“குறைந்த விலையில் தரமான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான முன்னெடுப்பின் அடையாளமாக, பிரதமரின் பாரதிய ஜன் ஔஷாதி பரியோஜனா எனப்படும் மலிவுவிலை மக்கள் மருந்தகத் திட்டம் திகழ்கிறது. இந்தத் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பணத்தை குறிப்பிடத்தக்க அளவில் சேமிப்பதை உறுதி செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை பார்வையிடும் வாய்ப்பு ஜி20 பிரதிநிதிகளுக்கு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது”.

***

(Release ID: 1917858)

AP/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1917923) आगंतुक पटल : 234
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam