பிரதமர் அலுவலகம்
அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பிரதமர் கருத்து
Posted On:
11 APR 2023 2:33PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"அருணாச்சலப்பிரதேச மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் மேம்படுத்தும்."
உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கிபித்தோவில் இந்திய திபத் எல்லை காவல் படையினரால் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களுடன் 9 சிறிய நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்படும் கண்காட்சி ஒன்றையும் பார்வையிட்டதாக கூறியிருந்தார்.
***
AD/PLM/RJ/KPG
(Release ID: 1915628)
Visitor Counter : 167
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam