பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், தமிழ் மொழி மற்றும் மேக் இன் இந்தியா உணர்வு ஆகியவை குறித்த பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிரதமர் பதில்
प्रविष्टि तिथि:
09 APR 2023 10:20PM by PIB Chennai
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், தமிழ் மொழி மற்றும் மேக் இன் இந்தியா உணர்வு ஆகியவை குறித்த பொதுமக்களின் கருத்துக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தெரிவித்துள்ளதாவது:
“சென்னை மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.”
“அறிந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
நேற்று தொடங்கப்பட்ட பணிகள், தமிழ்நாட்டின் வளர்ச்சியில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.”
மேக் இன் இந்தியா உணர்வு குறித்து கூறியதாவது:
“நான் உள்பட, இந்தியாவின் மூலை முடுக்குகளில் உள்ள மக்கள் அனைவரும் இந்த உணர்வைக் கொண்டுள்ளோம். மேக் இன் இந்தியா சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்கம், இந்தியாவின் வலிமை மற்றும் இந்திய மக்களின் திறன்களை உணர்த்துகிறது.”
தமிழ் மொழி பற்றிய கருத்துக்கு பிரதமர் அளித்த பதில்:
“நேற்றைய எனது உரையில் கூறியது போல, தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னையின் ஆற்றல் உணர்வை மிகவும் நேசிக்கிறேன்.”
***
AD/BR/KPG
(रिलीज़ आईडी: 1915277)
आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam