பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மரங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட இயற்கையுடன் பெங்களூரு மிக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது: பிரதமர்

Posted On: 01 APR 2023 9:33AM by PIB Chennai

மரங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட இயற்கையுடன் பெங்களூரு மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பெங்களூரில் உள்ள பல்வேறு வகை மரங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ள இயற்கை ஆர்வலரும், தோட்டக்கலை வல்லுநரும், கலைஞருமான திருமதி சுபாஷினி சந்திரமணியின் ட்வீட்டர் பதிவுகளுக்கு  பதிலளித்துள்ள பிரதமர்மக்கள் தங்கள் நகரங்களின் சிறப்புமிக்க அம்சங்களைப் பறைசாற்ற  அதன் சிறப்புகளை மற்றவர்களுக்கும் பகிருமாறு வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் ட்விட்டர் பதிவு வருமாறு;

“இது பெங்களூரு மற்றும் அதன் மரங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல். பெங்களூரு மரங்கள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட இயற்கையுடன் மிகவும் ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளது.

மற்றவர்களும் தங்கள் நகரங்களின் இத்தகைய சிறப்புமிக்க அம்சங்களை  காட்சிப்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பாக இருக்கும்’’.

**********

AD/PKV/DL


(Release ID: 1912781) Visitor Counter : 163