பிரதமர் அலுவலகம்
தமிழ்நாட்டின் விருது நகர் மாவட்டத்தில் பிஎம் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2023 5:49PM by PIB Chennai
தமிழ்நாட்டின் விருது நகர் மாவட்டத்தில் பிஎம் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரம் சார்ந்த விருதுநகர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள மெகா ஜவுளிப்பூங்கா அறிவிப்புக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதர–சகோதரிகளுக்கு இன்று சிறப்பான நாள். முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர், பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப்பூங்காவின் உறைவிடமாக இருக்கும். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பயன் அளிக்கும்.
தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பிரதமரின் மெகா ஜவுளிப்பூங்கா உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும். இதனமூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.
(Release ID: 1909596)
SM/ES/RS/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1909646)
வருகையாளர் எண்ணிக்கை : 227
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam