பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரின் கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 08 MAR 2023 7:02PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவின் கட்டுரையை சர்வதேச மகளிர் தினமான இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். "Her Story, My Story — Why I am hopeful about gender justice" என்ற தலைப்பு கொண்ட அந்தக் கட்டுரை, வெல்ல முடியாத இந்தியப் பெண்களின் மனப்பாங்கையும், திரௌபதி முர்முவின் வாழ்க்கைப் பயணத்தையும் உள்ளடக்கியது.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “திரிபுராவில் இருந்து திரும்பிவரும் வழியில் நான் அவரது கட்டுரையை வாசித்தேன். அது மிகவும் ஊக்கமளிப்பதாக இருப்பதையும் உணர்ந்தேன். அனைவரும் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். மகளிர் தினத்தில், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த ஒரு ஊக்கமளிக்கும் அவரது வாழ்க்கைப் பயணத்தை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.”

***

AP/ES/SG/RJ

 


(Release ID: 1905156) Visitor Counter : 171