பிரதமர் அலுவலகம்

5 வயது வரையிலான குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாட்டுக்கான உள்வைப்புக் கருவி பொருத்தும் திட்டத்திற்கு பிரதமர் பாராட்டு


நமது குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்: பிரதமர்

Posted On: 03 MAR 2023 6:26PM by PIB Chennai

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து, செவித்திறன் குறைபாட்டுக்கான உள்வைப்புக் கருவி பொருத்தும் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பலன்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு 6 லட்சம் ரூபாய் செலவாகும்.

இது தொடர்பாக மத்திய மின்சாரம் மற்றும் கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் திரு. கிருஷண் பால் குர்ஜார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“மிக நல்லத் தகவல். குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம்.”

***

AP/PLM/SG/KPG

 

 



(Release ID: 1904048) Visitor Counter : 146