பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலிருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்துத் துவக்கி வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 10 FEB 2023 6:04PM by PIB Chennai

ஒன்பதாவது மற்றும் பத்தாவது வந்தே பாரத் ரயில்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, துணை முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சர்களே, மகாராஷ்டிர மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே!

இன்று, இந்திய ரயில்வே துறைக்கு, குறிப்பாக மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் நவீன இணைப்பிற்கு மிக முக்கிய தினம். முதல்முறையாக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் ஒரே சமயத்தில் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மும்பை, புனே போன்ற நாட்டின் பொருளாதார மையங்களை முக்கிய ஆன்மீக தலங்களுடன் இணைக்கும். வந்தே பாரத் ரயில், இன்றைய நவீன இந்தியாவின் மிகப்பெரிய தோற்றமாக உள்ளது. இன்று வரை 17 மாநிலங்களின் 108 மாவட்டங்கள் வந்தே பாரத் விரைவு ரயில்களின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

21-வது நூற்றாண்டில் இந்தியா, பொது போக்குவரத்து அமைப்புமுறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். இதன் காரணமாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாகும். இதில் ரயில்வே துறைக்கு கிடைத்துள்ள பங்கு ரூ. 2.5 லட்சம் கோடி. உள்கட்டமைப்பில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

சகோதர, சகோதரிகளே,

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு வருடத்திற்கு ரூ. 2 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் பெறுவோருக்கு வரி விதிக்கப்பட்டது. பாஜக அரசு, முன்னதாக ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளித்தது. தற்போது இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்த தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவரின் வளர்ச்சிக்கும் அனைவரின் முயற்சி என்ற உணர்வை முன்வைக்கும் இந்த நிதிநிலை அறிக்கை ஒவ்வொரு குடும்பத்திற்கும் உத்வேகம் அளிக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க நம் அனைவரையும் இது ஊக்குவிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நன்றி!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

***

(Release ID: 1898010)

MSV/RB/RR



(Release ID: 1899086) Visitor Counter : 134