பிரதமர் அலுவலகம்
தற்சார்பு இந்தியாவை நோக்கிய தனது நடவடிக்கைகளில் ஒத்துழைக்கவும், கூட்டாளியாக செயல்படவும் நாட்டின் கல்வியாளர்கள், அறிவியல் சமூகத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு இந்திய விமானப்படை அழைப்பு
இந்தியாவின் மதிநுட்பம் வாய்ந்த சிந்தனையாளர்கள் மற்றும் ஆற்றல்மிக்க தொழில்முனைவோருக்கு இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்று பிரதமர் கருத்து
प्रविष्टि तिथि:
13 FEB 2023 9:15AM by PIB Chennai
தற்சார்பு இந்தியாவை நோக்கிய தனது நடவடிக்கைகளில் ஒத்துழைக்கவும், கூட்டாளியாக செயல்படவும் நாட்டின் கல்வியாளர்கள், அறிவியல் சமூகத்தினர் மற்றும் தொழில்துறையினருக்கு இந்திய விமானப்படை அழைப்பு விடுத்துள்ளது. இதில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்து ஏரோ இந்தியா 2023 நிகழ்ச்சிக்கு முன்னதாக, 31 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தற்சார்பை நோக்கிய முயற்சியில் முக்கிய கூட்டாளிகளாக இந்தியாவின் மதிநுட்பமான சிந்தனையாளர்கள் மற்றும் ஆற்றல்வாய்ந்த தொழில்முனைவோரை ஈடுபடுத்துவது அவர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியுள்ளதாவது:
“நமது நாட்டை எப்போதும் பெருமைப்படுத்தும் பாதுகாப்பு துறையில் தற்சார்பை நோக்கிய முயற்சியில் முக்கிய கூட்டாளிகளாக இந்தியாவின் மதிநுட்பமான சிந்தனையாளர்கள் மற்றும் ஆற்றல்வாய்ந்த தொழில்முனைவோரை ஈடுபடுத்துவது அவர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பு.”
***
(Release ID: 1898608)
PKV/RB/RR
(रिलीज़ आईडी: 1898647)
आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam