பிரதமர் அலுவலகம்
புதிய கண்டுபிடிப்புகள், புதிய மாற்றங்களை பின்பற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2023 9:17AM by PIB Chennai
மருத்துவ உலகில் புதிய கண்டுபிடிப்புகளில் முன்னிலையிலும், புதிய மாற்றங்களை பின்பற்றுவதிலும் ஆர்வத்துடன் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு நான்கு முனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஒடிசாவில் இது முதல் முறையாகவும், உலகளவில் இரண்டாவது முறையாக இது நிகழ்ந்துள்ளது.
புவனேஸ்வர் எய்ம்சின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-
“புத்தாக்கத்தில் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது மருத்துவர்கள், மருத்துவ உலகின் புதிய மாற்றங்களையும் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள். அவர்களது மகத்தான சாதனை நம்மை பெருமை அடைய வைக்கிறது.”
***
(Release ID: 1898609)
PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1898637)
வருகையாளர் எண்ணிக்கை : 287
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam