பிரதமர் அலுவலகம்

பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் பாராட்டினார்

Posted On: 24 JAN 2023 8:33PM by PIB Chennai

பிரதமரின் தேசிய சிறார் விருது பெற்றவர்களைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டினார். புதிய கண்டுபிடிப்பு, சமூக சேவை, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் வீரம் ஆகிய ஆறு பிரிவுகளில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு மத்திய அரசு பிரதமரின் தேசிய சிறார் விருதினை வழங்கி வருகிறது. இந்த விருது பெற நாடு முழுவதும் இருந்து 11 சிறார்கள்  தெரிவு செய்யப்பட்டனர். விருது பெற்றவர்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 6 சிறுவர்களும் 5 சிறுமிகளும் அடங்குவர்.

இது தொடர்பாக பிரதமர் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், “பாடகர் ஆதித்யா சுரேஷ், நடனக் கலைஞர் எம்.கௌரவி ரெட்டி, சிறந்த கட்டுரைகளை எழுதிய சம்பாப் மிஸ்ரா, அதிக நேரம் தபேலா வாசித்து சாதனை படைத்த தபேலா கலைஞர் ஸ்ரேயா பட்டாச்சார்ஜி, ஆற்றில் குதித்து நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்றிய ரோஹன் ராம்சந்திர பாஹிர், சுத்தமான தண்ணீரை உறுதி செய்வதற்கான செலவு குறைந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பணியாற்றி வரும் ஆதித்ய பிரதாப் சிங் சௌஹான், செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட ரிஷி ஷிவ் பிரசன்னா, சிறுவர்களைத் தாக்குவதற்கு எதிராக செயலி மற்றும் பிற இணைய வழி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் அனோஷ்கா ஜாலி, தற்காப்புக் கலைப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள ஹனாயா நிசார், 2022 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்லர் கம்பம் போட்டியில் சிறந்து விளங்கிய சௌர்யஜித் ரஞ்சித்குமார் கைரே, புகழ்பெற்ற சதுரங்க வீராங்கனையான கொலகட்லா அலனா மீனாட்சி என பால புரஸ்கார் விருது பெற்ற 11 பேரின் சிறப்புகளையும், சாதனைகளையும் தனித்தனியாக பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

***

(Release ID: 1893393)

SMB/CR/KRS



(Release ID: 1893544) Visitor Counter : 165