உள்துறை அமைச்சகம்
சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது-2023
Posted On:
23 JAN 2023 12:28PM by PIB Chennai
பேரிடர் மேலாண்மையில் சிறந்த பங்களிப்பை மேற்கொண்டதற்காக அமைப்பு பிரிவில் ஒடிஷா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மிசோரமில் உள்ள லுங்லைய் தீயணைப்பு நிலையம் ஆகியவை சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விருது ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புக்கு, 51 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சான்றிதழும், தனிநபருக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்காக அமைப்புகள் மற்றம் தனிநபர்களிடம் இருந்து 274 பரிந்துரைகள் பெறப்பட்டன.
2014-ம் ஆண்டு ஹுட்குட், 2019-ம் ஆண்டில் ஃபணி, 2020-ம் ஆண்டு ஆம்ஃபண்ட் புயல்களின் போதும், 2020-ம் ஆண்டு ஒடிஷா வெள்ளப்பெருக்கின் போதும், ஒடிஷா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சிறப்பான சேவையை மேற்கொண்டது.
2021-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி அன்று லுங்லை நகரம் மற்றும் பத்துக்கும் மேற்பட் கிராமங்களைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பரவிய மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்கும் பணியை மிசோரமில் உள்ள லுங்லை தீயணைப்பு நிலையம் சிறப்பாக கையாண்டது. உள்ளூர் மக்களுடன் இணைந்த 32 மணிநேரங்களுக்கு மேலாக தீயணைப்பு பணியில் படைவீரர்கள் ஈடுபட்டனர்.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1893029)
Visitor Counter : 243
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada