உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2022 9:35AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு அமித் ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள திரு அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மதிப்பிற்குரிய ஹீரா பா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. ஒரு மனிதரின் வாழ்வில் முதல் நண்பரும் ஆசிரியரும் தாய்தான், ஒருவரின் தாயை இழந்த வலி சந்தேகத்திற்கு இடமின்றி மிகப்பெரிய வலியாகும் என்று கூறியுள்ளார்.

தனது குடும்பத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக ஹீரா பா எதிர்கொண்ட போராட்டங்கள் அனைவருக்கும் வழிகாட்டக் கூடியவை.  அவரது தியாகம் நிறைந்த துறவு வாழ்க்கை என்றும் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  நாடு துணைநிற்கிறது. கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைகள் பிரதமருக்காக  உள்ளன. ஓம் சாந்தி என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

***********

(Release ID: 1887437)

AP/SMB/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1887488) வருகையாளர் எண்ணிக்கை : 244
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Telugu