பிரதமர் அலுவலகம்
ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு பிரதமர் வாழ்த்து
ஃபிஃபா உலகக் கோப்பையில் உணர்ச்சிமிக்க பங்களிப்பிற்காக பிரான்ஸ் அணிக்கும் வாழ்த்து
प्रविष्टि तिथि:
18 DEC 2022 11:55PM by PIB Chennai
ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பையில் உற்சாகமான, உணர்ச்சிமிக்க பங்களிப்பிற்காக பிரான்ஸ் அணிக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்:
"மிகவும் பரபரப்பான கால்பந்துப் போட்டிகளில் இந்தப் போட்டியும் ஒன்றாக நினைவில் நிற்கும்! அர்ஜென்டினா #FIFAWorldCup Champions ஆனதற்கு வாழ்த்துகள்! அவர்கள் மிகத்திறமையாகவும், அற்புதமாகவும் விளையாடினர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்! @alferdez"
"பிரான்ஸ் #FIFAWorldCup-ல் உற்சாகமான, உணர்ச்சிமிக்க பங்களிப்பிற்காக வாழ்த்துக்கள்! இறுதிப் போட்டி வரையில் அவர்கள் தங்கள் திறமை மற்றும் விளையாட்டுத்திறன் மூலம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்தனர் @EmmanuelMacron" என்று தெரிவித்துள்ளார்.
******
AP/GS/RS/RR
(Release ID: 1884666)
(रिलीज़ आईडी: 1884702)
आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Urdu
,
English
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam