பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வெற்றி தினத்தையொட்டி 1971-ஆம் ஆண்டு போர் வெற்றிக்காக போராடிய ஆயுதப்படையினருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

Posted On: 16 DEC 2022 11:18AM by PIB Chennai

வெற்றி தினத்தையொட்டி 1971-ஆம் ஆண்டு போரில் இந்தியா மகத்தான வெற்றியை அடைவதை உறுதி செய்த துணிச்சல் மிக்க அனைத்து ஆயுதப்படையினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

விஜய் தினத்தையொட்டி, 1971-ஆம் ஆண்டு போரில் இந்தியா மகத்தான வெற்றியை அடைவதை உறுதி செய்த துணிச்சல் மிக்க அனைத்து ஆயுதப்படையினருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக  ஆயுதப்படையினருக்கு நாடு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்”.

-----

(Release ID: 1884011)

SRI/PKV/KPG/RR



(Release ID: 1884032) Visitor Counter : 165