எரிசக்தி அமைச்சகம்
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2022: குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
Posted On:
13 DEC 2022 12:14PM by PIB Chennai
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14-ஆம் தேதி தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். எரிசக்தி செயல்திறன் மற்றும் பாதுகாப்பில் நாட்டின் சாதனைகளை எடுத்துரைப்பது இந்த தினத்தின் நோக்கமாகும். இந்த நிகழ்ச்சியில் மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர். கே. சிங் கலந்து கொண்டு உரையாற்றுவார். மத்திய எரிசக்தி மற்றும் கனரக தொழில்துறை இணையமைச்சர் திரு கிருஷன் பால், எரிசக்தி அமைச்சக செயலாளர் திரு அலோக் குமார் ஆகியோரும் விழாவில் பங்கேற்பார்கள்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள், தேசிய எரிசக்தி செயல்திறன் புத்தாக்க விருதுகள் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் வழங்குவதோடு, தேசிய ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அளித்து, ஈ.வி யாத்ரா (EV Yatra) என்ற தளத்தையும், செல்பேசி செயலியையும் தொடங்கி வைப்பார்.
• தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2022
• தேசிய எரிசக்தி செயல்திறன் புத்தாக்க விருதுகள் 2022
• பள்ளி குழந்தைகளுக்கான தேசிய ஓவியப் போட்டி 2022
• ஈ.வி யாத்ரா தளம் மற்றும் செல்பேசி செயலியின் அறிமுகம்
• எரிசக்தி செயல்திறன் துறையில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அமர்வு
முதலியவை இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
**************
SRI/RB/IDS
(Release ID: 1883034)
Visitor Counter : 415