பிரதமர் அலுவலகம்

ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பிரதமர் வலைப்பூவில் தனது எண்ணங்களை பதிவிட்டுள்ளார்

“இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையாக மாற்றுவோம்”

Posted On: 01 DEC 2022 10:20AM by PIB Chennai

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா இன்று ஏற்றுக்கொண்டுள்ள சிறப்பான தருணத்தில் , பிரதமர் திரு நரேந்திர மோடி வலைப்பூ (பிளாக்-Blog) ஒன்றில்  தமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள் வருமாறு:

“ஜி20 தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், பிரதமர் @narendramodi வலைப்பூவில் தனது எண்ணங்களை பதிவிட்டுள்ளார்”

“இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம், மனிதகுலம் முழுவதும்  பயன்பெறுவதை நோக்கிய பணியாற்றுதல் ஆகும்”.

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”

“இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும் சவால்களுக்கு ஒன்றாகச் சேர்ந்துதான் தீர்வுகாண முடியும்”

“இந்தியா உலகின் ஒரு சிறிய வடிவம்”

“கூட்டாக முடிவெடுக்கும் மிகப்பழமையான பாரம்பரியங்களுடன், ஜனநாயகத்தின் அடிப்படை உயிரணுவாக இந்தியா திகழ்கிறது”

“மக்கள் நலனுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்”

“நமது ஒரே பூமியை புனரமைத்தல், நமது ஒரே குடும்பத்திற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், நமது ஒரே எதிர்காலத்திற்கு நம்பிக்கையை அளித்தல் ஆகியவை கவனம் செலுத்த வேண்டிய நமது முன்னுரிமைகளாகும்”

“இந்தியாவின் ஜி20 செயல்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய, லட்சியம் மிக்க, செயல்திறன் சார்ந்த உறுதியான முடிவெடுத்தல் ஆகும்”

“இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புனரமைத்தல், நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமைப் பொறுப்பாக மாற்றுவோம்”

பிரதமர் தனது @narendramodi ட்விட்டர் கணக்கில் பதிவான விவரங்களை பகிர்ந்து கொண்டுள்ளதுடன் ஜி20 நாடுகளின் தலைவர்களுக்கும் அதனை அனுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு:- “இன்று இந்தியா அதன் ஜி20 தலைமைத்துவத்தை தொடங்கியுள்ள நிலையில், உலக நலனுக்காக, அனைவரையும் உள்ளடக்கிய லட்சியம் மிக்க, செயல்திறன் சார்ந்த உறுதியான முடிவுகளை எடுக்கும் செயல்திட்டத்தின் அடிப்படையில்  எவ்வாறு நாம் வரும் ஆண்டில் பணியாற்றவிருக்கிறோம் என்பது குறித்த சில எண்ணங்களை எழுதியுள்ளேன்” #G20India   @JoeBiden @planalto

“மனிதகுலம் முழுவதற்கும் பலனளிக்கும் வகையில் அடிப்படை மனப்போக்கில் மாற்றத்தை உருவாக்கி முன்னேறி செல்லவேண்டிய மிகச்சிறந்த தருணம் இது என நான் உறுதியாக நம்புகிறேன்” #G20India  

@MohamedBinZayed @AlsisiOfficial @RishiSunak @vonderleyen

ஒற்றுமையை போதிக்கும் நமது ஆன்மீக பாரம்பரியங்களை உந்துசக்தியாகக் கொண்டு உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாண ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய நேரம் இது  #G20India

@sanchezcastejon @KumarJugnauth @BDMOFA @President_KR”

**************

RI/PKV/AG/RJS



(Release ID: 1880223) Visitor Counter : 174